கண்டி: தொடரும் பாதுகாப்பு அச்சம் - தயக்கம்! - sonakar.com

Post Top Ad

Friday 9 March 2018

கண்டி: தொடரும் பாதுகாப்பு அச்சம் - தயக்கம்!



இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் கண்டி மாவட்டத்தில் அச்சமான சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுமைகள் இடம் பெற்றன.

வழமையாக வெள்ளிக்கிழமை தொழகைக்கு வரும் எண்ணிக்கையை விட குறைந்தளவே மக்கள் பள்ளிகளுக்கு சமூகமளித்திருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், பெண்களை மட்டும் தனியே வீடுகளில் விட்டுச் செல்லமுடியாமலும், மற்றும் சிலர் நிர்கதி நிலையில் தஞ்சமடைந்துள்ளதாலும் அச்சம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலருமாக அதிகளவினர் பள்ளிகளுக்கு சமூகமளிக்காத நிலையே காணப்பட்டது. 

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட மோதும் தொடர்ந்து அச்ச நிலையிலே மக்கள் வாழ்கின்றனர். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அதிகளவு மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். அதே நேரம் வழமையில் மலிகைச் சாமான்களால் நிரம்பி வழியும் கடைகள் பொருட்கள் தட்டுப்பாடுகாரணமாக காலியாகவே காணப்பட்டன. 

அதேநேரம் காய்கறிக்கடைகளில் போதிய காய்கறிகள் இன்றி காய்ந்த நிலையைக் காணமுடிந்தது. பழக்கடைகளில் பழங்கள் பாவணைக்குதவாத நிலையில் காணப்பட்டன. நிலைமை வழமைக்குத் திரும்பா விட்டால் அடுத்த சில தினங்களில் குறிப்பிட்ட சில உலர் உணவுகளுக்கு தட்டுபாடு நிலவலாம் என்ற அச்சமும் காணப்படுகிறது.


ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள எண்டருதென்ன கிராமத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு இன்னும் போதியளவு உதவிகள் சென்றடைய வில்லை என அங்குள்ள பள்ளி நிர்வாகம் உற்பட சில நண்பர்களும் தெரிவிக்ககின்றனர். உடனடியாக உணவுப் பிரச்சினை தீர்க்ப்பட வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது. இது தொடர்பாக அங்குள்ள பள்ளி நிர்வாகமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

முடியுமானவர்கள் நுகவல என்ற இடத்தை அண்மித்துள்ள மேற்படி என்டறுதென்ன கிராமத்திற்கு குருநாகல் வழியாக 4ம் கட்டைப் பிரதேசத்தினூடாகச் செல்லமுடியும். ஆல்லது கட்டுகாஸ்தோட்டை ரனவன வீதியூடாக ரஜபிஹில்ல என்ற இடத்தினூடாகவும் செல்ல முடியும். சாதாரண வசதி குறைந்த குடும்பங்களே இங்கு அதிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர்.  

-ஜே.எம்.ஹபீஸ்

No comments:

Post a Comment