அரச நிர்வாகம் சீர் குலைந்துள்ளது: கபே அமைப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 February 2018

அரச நிர்வாகம் சீர் குலைந்துள்ளது: கபே அமைப்பு!மைத்ரி - ரணிலின் பலவீனத்தால் அரச நிர்வாகம் சீர்குலைந்து போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது கபே அமைப்பு.


உள்ளூராட்சித் தேர்தல் முடிவுற்றுள்ள போதிலும் மன்றங்களை அமைப்பதிலும் நிர்வாகத்தை நிலை நாட்டுவதிலும் அரச தலைவர்கள் காட்டும் அசமந்தப் போக்கே இதற்குக் காரணம் என தெரிவிக்கின்ற அவ்வமைப்பு, அமைச்சரவை மாற்றம் கூட சர்ச்சைகளை அதிகரித்திருக்கிறதே தவிர எதற்கும் தீர்வைக் காணவில்லையென தெரிவித்துள்ளது.


மக்கள் அபிலாசைகளுக்கு எதிராகவே தொடர்ந்தும் இயங்கும் தலைவர்கள் உள்ளூராட்சி சபைகளைத் தாமதப்படுத்துவதன் மூலம் மேலும் சீர் கேட்டை உருவாக்குவதாகவும் அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment