கொழும்பு சாஹிரா - வெஸ்லி கல்லூரி இடையிலான உதைபந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட முறுகல் சம்பவத்தின் பின்னணியில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பார்வையாளர்களுக்கும் மாணவர்களுக்குமிடையில், நேற்று மாலை இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட இச் சம்பவத்தில் பத்து பேர் காயமுற்றிருப்பதாக பொலிஸ் தகவல் தெரிவிக்கிறது.
வெள்ளவத்தை குரே மைதானத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைதானவர்கள் வெள்ளவத்தை மற்றும் கிருலபன பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment