அனர்த்த முகாமைத்துவ Drone பயிற்சி - sonakar.com

Post Top Ad

Friday 14 July 2023

அனர்த்த முகாமைத்துவ Drone பயிற்சி

 



அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு ட்ரோன்  (Drone) தொழிநுட்பத்தின் பிரயோகம் தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் பயிற்சியளித்தல் நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் புவியற்துறைத்தலைவர் கே.நிஜாமீர் தலைமையில்  இடம்பெற்றது.


அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க தென் கிழக்கு பல்கலைக்கழக  கலை  கலாசாரபீட கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை (13) நடைபெற்றது.


இதன்போது அனர்த்த முகாமைத்துவத்தின் ஒவ்வொரு படிமுறைகளிலும் ட்ரோன் தொழிநுட்பத்தின் அவசியம் பற்றி தெளிவாக விளக்கியதோடு அனர்த்த ஆபத்துக்களை மாவட்டத்தில் குறைப்பதற்கான நடடிக்கையினை இத்தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் நுட்பங்கள் பயிற்சி பட்டறையில் வளவாளரால் வழங்கப்பட்டது.விளக்கினார்.


இந்நிகழ்வின்   இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமிஸ் அபூபக்கர்,தென்கிழக்குப் பல்கலைக்கழக  கலை, கலாசாரபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ், புவியிற்துறை பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல்.பௌசுல் அமீர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற  அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


- பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment