நிபுணர்கள் பற்றாக்குறையால் திணறும் மருத்துவத் துறை - sonakar.com

Post Top Ad

Friday 23 June 2023

நிபுணர்கள் பற்றாக்குறையால் திணறும் மருத்துவத் துறை

 



இலங்கையில் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை வெகுவாக அதிகரித்து வருவதாப புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


தேவையை விட பாதியளவு மருத்துவ நிபுணர்களே நாட்டில் தற்போது உள்ள அதேவேளை இவ்வருடம் சுமார் 300 பேர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்போதுள்ள 18 இதய அறுவை சிகிச்சை நிபுணர்களுள் ஒன்பது பேர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்லவுள்ள திட்டமிட்டுள்ள அதேவேளை ஏனைய விசேட தகைமைகள் கொண்ட பலர் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மற்றும் மருத்துவ நிலையங்களின் குறைபாடுகளினால் தொழில் விருத்தி நிமித்தம் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment