மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் போதிய நிதி வழங்கப்படா விட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
பொருளாதார சிக்கலை முற்படுத்தி அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை 'மறக்கடிக்கச்' செய்துள்ள நிலையில், பல்வேறு அரச திணைக்களங்கள் தொடர்ந்தும் நிதிப் பிரச்சினையினால் சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றன.
இந்நிலையிலேயே, அவசியப்படும் மருந்து வகைகளை கொள்வனவு செய்ய நிதி வழங்கப்படா விட்டால் தன்னால் தொடர்ந்தும் இயங்க இயலாது போகும் என அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment