பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கராபிட்டிய பகுதியில், பொலிசாரின் சமிக்ஞையை மதிக்காது பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ள அதேவேளை, உள்ளிருந்த இருவர் தப்பியோடியதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்வதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment