கம்பளை யுவதி கொலை; வல்லுறவு இல்லையென அறிக்கை - sonakar.com

Post Top Ad

Monday 15 May 2023

கம்பளை யுவதி கொலை; வல்லுறவு இல்லையென அறிக்கை

 


 

கம்பளையில் கொலையான 22 வயது யுவதி முனவ்வராவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.


கொலையான பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படவில்லையென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஏலவே இச்சம்பவத்தின் பின்னணியில் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மருந்தகம் ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி, சந்தேக நபரின் அழுத்தத்துக்கு இடம் கொடுக்க மறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment