ரணில் விக்கிரமசிங்கவை விட, அடுத்த ஜனாதிபதியாவதற்குத் தகுதியான பலர் மொட்டுக் கட்சியில் இருப்பதாக தெரிவிக்கிறார் ரோஹித அபேகுணவர்தன.
கட்சியாக, இதுவரை பெரமுனவினால் யாரும் முன் மொழியப்படவிவ்லையென தெரிவிக்கின்ற அவர், ரணிலை விட தகுதியானவர்கள் இருப்பதால் கட்சி மட்டத்திலான தீர்மானம் பின்னர் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கிறார்.
கட்சியடிப்படையில் நாடாளுமன்றில் 'தனி மனிதனான' ரணில், முன்னாள் பங்காளிகளான சமகி ஜன பல வேகய உறுப்பினர்களை வளைத்துப் போடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment