உகண்டாவில் பதுக்கிய பணம்: நாமல் கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday 9 April 2023

உகண்டாவில் பதுக்கிய பணம்: நாமல் கோரிக்கை

 ராஜபக்ச குடும்பத்தினர் உகண்டாவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக ஜே.வி.பி தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளது உண்மையென்றால், அரசாங்கம் உடனடியாக அதனை மீட்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும் என்கிறார் நாமல் ராஜபக்ச.


தற்போது ஜனாதிபதியாகவுள்ள ரணிலும் - மைத்ரியும் இணைந்து நடாத்திய 'நல்லாட்சியின்' போதே இவ்வாறு சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லையென நீதிமன்றங்கள் நிராகரித்த போதிலும் அநுர குமார திசாநாயக்க மக்கள் மனதில் வெறுப்பை விதைத்து வருவதாக தெரிவிக்கும் நாமல், அவ்வாறு பணமிருந்தால் அதனை கொண்டு வர உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.


ராஜபக்ச குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, அரசியலிருந்து அவர்களை ஒதுக்க முனைவதையன்றி வேறு எதையும் இந்த குற்றச்சாட்டுகளால் சாதிக்கவில்லையெனவும் நாமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment