இனி பணம் ஒதுக்கிய பின் தான் தேர்தலுக்கு 'தேதி' - sonakar.com

Post Top Ad

Wednesday 19 April 2023

இனி பணம் ஒதுக்கிய பின் தான் தேர்தலுக்கு 'தேதி'

  எதிர்பார்த்தபடி ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் இடம்பெறப் போவதில்லையென உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை, இனி, திறைசேரியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்ட பின்னரே புதிதாக தேதி குறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றில் தனது அத்திவாரத்தை உறுதி செய்து கொண்டதும் பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தலையே ரணில் நடாத்துவார் என்பது அரசியல் மட்டத்தில் நிலவும் கருத்தாக இருக்கிறது.


இதற்கேற்ப, தேசிய அரசை அமைப்பதற்கு ரணில் முயலும் அதேவேளை, கை கோர்ப்பதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் தற்போதைய எம்.பிக்கள் முண்டியடித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment