முட்டையைத் தேடி இந்தியா சென்ற STC - sonakar.com

Post Top Ad

Sunday, 12 March 2023

முட்டையைத் தேடி இந்தியா சென்ற STC

 



இந்தியாவிலிருந்து பெறுவதற்கு எதிர்பார்த்திருந்த 'முட்டைகள்' வந்து சேராத நிலையில் அதனைத் தேடி இந்தியாவுக்கு சென்றுள்ளார் அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிசுந்தர.


கடந்த வெள்ளி (10) வந்து சேர்ந்திருக்க வேண்டிய முட்டைத் தொகை தாமதமாகியுள்ள நிலையில் அதற்கான தீர்வு தேடி ஆசிரி இந்தியா சென்றுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந்திய வாக்குறுதிகளின் அடிப்படையில் இலங்கைக்கு முட்டைகள் தொகுதி தொகுதியாக அனுப்பப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment