ஏப்ரல் 25ம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தும் எண்ணம் அரசுக்கு இல்லையெனவும், தேர்தலுக்கான சாத்தியமில்லையெனவும் தெரிவிக்கிறது PAFFREL.
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அதிகாரப் போக்கு நிலவுவதால் தேர்தலை நடாத்தாமல் விடுவதற்கான காரணங்களே தேடப்படுவதாகவும் சுட்டிக்காட்டும் அவ்வமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி, மக்கள் தம் கருத்துக்களை வெளியிடுவதற்கான ஜனநாயக உரிமையை அரசு மதிக்கத் தயாரில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் 25ம் திகதி தேதி குறிக்கப்பட்டுள்ள போதிலும் ஆளுங்கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லையென பரவலான குற்றச்சாட்டு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment