25 வருடங்களில் 'நாட்டை' முன்னேற்றும் திட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday 19 March 2023

25 வருடங்களில் 'நாட்டை' முன்னேற்றும் திட்டம்

 



2048ம் ஆண்டளவில் கடன்களையெல்லாம் அடைத்து, நாட்டில் கையிருப்பில் 'மேலதிக' பணம் இருக்கும் 'அபிவிருத்தியடைந்த' சூழ்நிலையை உருவாக்க, அனைவரையும் கை கோர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.


தேசியப் பட்டியல் ஊடாக கிடைத்த நாடாளுமன்ற ஆசனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி, ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய ரணில், ராஜபக்ச குடும்பத்தினரால் அதாள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டதாக கூறப்படும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, தனது சர்வதேச தொடர்புகள் ஊடாக முறையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவரது கட்சிக்காரர்களை போற்றப்படுகிறார்.


இந்நிலையில், இலங்கையின் அபிவிருத்தியை தரமுயர்த்த 25 வருட 'காலம்' தேவையென கூறியுள்ள ரணில், அனைத்து தரப்பினரையும் ஒன்று சேருமாறு அழைப்பு விடுத்துள்ளமையும், சாதாரணமாக தமக்கான 'வசதி - வாய்ப்புகள்' தரப்படா விடத்து கட்சி மாறி ஆட்சி கவிழ்க்கும் அரசியல் கலாச்சாரமே இன்னும் நாட்டில் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment