2020 பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற பின் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்த சுஜீவ சேனசிங்கவுக்கு பதவியும் பொறுப்பும் வழங்கி மீண்டும் உள்ளிழுத்துள்ளது சமகி ஜன பல வேகய.
குறித்த கட்சியின் தேர்தல் திட்டமிடல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்கான செயலாளராக சுஜீவ இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஜீவ, பதவியிலிருந்த காலத்தில் ராஜபக்சக்களுக்கு நாடாளுமன்றில் பதிலளிப்பதில் வல்லவராக இருந்த போதிலும் அவரது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி சுஜீவவின் சகோதரர் அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் மக்கள் அதிருப்தியை சம்பாதித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment