தேர்தலை நடாத்துவதற்கான நிதியில்லையென்பது தெளிவான விடயம் என ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக தெரணவின் எழுத்தூடகமான அருண தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், ஏலவே அறிவிக்கப்பட்ட தேர்தலை நிறுத்துவதற்கோ நடாத்துமாறு வலியுறுத்துவதற்கோ தனக்கு அதிகாரமில்லையெனவும் விளக்கமளித்துள்ள அவர், ஈற்றில் நீதிமன்றமே இவ்விடயத்தை தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடாத்த, 77 கோடி ரூபாய் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதனை முற்றாக வழங்குவதற்கான சூழ்நிலையில் திறைசேரி இல்லையென தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையிலேயே ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment