இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள, நாடு வந்து சேர்ந்துள்ள பங்களதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர், அப்துல் முமின் முன்னாள் பிரதமர் மஹிந்தவை சந்தித்து அளவளாவியுள்ளார்.
ராஜபக்ச அரசினால் இலங்கையின் பொருளாதாரம் அதாள பாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருந்த தருவாயில் பங்களதேஷ் கடனுதவி வழங்கியிருந்தமையை நினைவுகூறிய மஹிந்த, அதற்கு இதன் போதும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment