உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள போதிலும் அதனை பின் போடுவதற்கு தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், 22ம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறு இல்லையெனவும், நாளைய தினம் தபால் வாக்களிப்புக்கான அட்டைகளை விநியோகிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
பொருளாதார சிக்கல்களின் பின்னணியில் தேர்தலை பின் போட உத்தரவிடுமாறு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ள போதிலும் அதனை எதிர்வரும் 23ம் திகதியே நீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளது. ஆயினும், அதையும் முற்படுத்துமாறு கோரி மேலும் ஒரு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment