கடவுச்சீட்டு வழங்கல் வழமைக்குத் திரும்பியது - sonakar.com

Post Top Ad

Tuesday 14 February 2023

கடவுச்சீட்டு வழங்கல் வழமைக்குத் திரும்பியது

 


 

தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றைய தினம் முடங்கியிருந்த கடவுச்சீட்டு வழங்கல் நடவடிக்கைகள் இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கிறது.


எனினும், இன்றைய தினத்துக்கான முன்பதிவுகளை மேற்கொண்டவர்களை நாளை செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, நேற்றைய தினம் கடவுச்சீட்டுகளை பெற முடியாமல் போனவர்களுக்கு அவற்றை தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் ஆலோசிக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment