மேலும் 50 இந்திய 'பேருந்துகள்' கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 5 February 2023

மேலும் 50 இந்திய 'பேருந்துகள்' கையளிப்பு

 இலங்கைக்கு 500 பேருந்துகளை வழங்குவதற்கான வாய்ப்பை கடன் வழங்கல் ஊடாக பெற்றுக் கொண்ட இந்தியா, மேலும் 50 பேருந்துகளை இன்று கையளித்துள்ளது.


இலங்கைக்கு கடனுதவி வழங்க முன் வந்த இந்தியா, அதனை தனது தயாரிப்புகளின் ஏற்றுமதியாகவே வழங்க இணங்கியது. இப்பின்னணியில், பந்துல குணவர்தன 500 பேருந்துகளை தருமாறு முன் வைத்த கோரிக்கையின் பின்னணியில் இதுவரை 165 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.


எஞ்சியிருக்கும் தொகை மார்ச் அளவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment