இம்முறை சுதந்திர தினத்துக்காக அரசு செலவிட்ட மொத்த தொகை, 11 கோடி, 13 லட்சம் ரூபாய் என விளக்கமளித்துள்ளது அரசாங்கம்.
கல்வியமைச்சின் 5.8 மில்லியன் ரூபா இதற்காக சூறையாடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலை மறுத்துள்ள அரசு, மொத்த தொகையானது 11,130,011.29 என விளக்கமளித்துள்ளதுடன் ஏகப்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்தமை மற்றும் வசதி வாய்ப்புகளையும் காரணங் காட்டியுள்ளது.
எனினும், நாட்டின் பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இவ்வாறான கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தொடர்ச்சியான வாதம் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment