மூன்று பேர் இருந்தாலும் 'தேர்தலை' நடாத்தலாம்: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Thursday 26 January 2023

மூன்று பேர் இருந்தாலும் 'தேர்தலை' நடாத்தலாம்: தேசப்பிரிய

 



தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சி ஹவா பதவி விலக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறு ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லையென விளக்கமளித்துள்ளார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.


தேர்தல் ஆணைக்குழுவின் யாப்பின் பிரகாரம் மூன்று உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது எனவும், தவிசாளர் வராவிட்டால், அதில் ஒருவர் கூட்டத்தைத் தலைமை தாங்கி முடிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


மார்ச் மாதம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் தேர்தலை பின் போடும் என்ற சந்தேகம் தொடர்ச்சியாக நிலவி வருகின்றமையும், தொடர்பு பட்ட சம்பவங்கள் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment