அமெரிக்க பிரஜாவுரிமையை மீளக் கேட்கும் கோட்டா - sonakar.com

Post Top Ad

Monday 2 January 2023

அமெரிக்க பிரஜாவுரிமையை மீளக் கேட்கும் கோட்டா

 



இலங்கையின் ஜனாதிபதியாவதற்காக கை விட்ட அமெரிக்க பிரஜாவுரிமையை மீளவும் கேட்டு தனது சட்டத்தரணிகள் ஊடாக விண்ணப்பித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.


குடும்பத்துடன் தற்போது டுபாயில் தங்கியிருப்பதாகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவுக்கான சுற்றுலா விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சண்டே டைம்ஸ் செய்தியின் பிரகாரம் அவர் ஏலவே தமது பிரஜாவுரிமையை மீளப் பெற விணப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இலங்கையின் ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்த போதும், தமது பதவியைக் கை விட்டு நாட்டை விட்டுப் தப்பியோடும் சூழ்நிலைக்கு கோட்டாபய தள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment