ரணிலை வீழ்த்த 'மதி நுட்பம்' வேண்டும்: ஹிருனிகா - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 January 2023

ரணிலை வீழ்த்த 'மதி நுட்பம்' வேண்டும்: ஹிருனிகா

 கோட்டாபயவை விரட்டியது போன்று ரணிலை அத்தனை எளிதாக விரட்டி விட முடியாது என்கிறார் ஹிருனிகா பிரேமசந்திர.


ஒரு ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களை தந்திரமாக பயன்படுத்துவதில் எல்லோரையும் மிஞ்சியிருக்கும் ரணிலை வீழ்த்த மதி நுட்பம் வேண்டும் எனவும் கோட்டாபய நினைத்துப் பார்க்காத அளவுக்கு அதிகாரங்களை ரணில் கச்சிதமாக பயன்படுத்துவதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்கவை தாக்கிப் பேசி வரும் ஹிருனிகா, ரணிலின் மதிநுட்பத்தை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment