மொட்டின் வாக்கு வங்கி, தற்போதைய நிலைமையில் பத்து லட்சத்துக்கும் குறைவானது என தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார.
உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு எந்த வகையிலும் மலராது என தெரிவிக்கின்ற அவர், நாடாளுமன்றிலும் அந்த மாற்றம் பிரதிபலிக்கும் எனவும் விளக்கமளித்துள்ளார். 20ம் திருத்தச் சட்டத்தின் போது 157 வாக்கு பலமிருந்த போதும், ஜனாதிபதி தெரிவின் போது அது 134 ஆகக் குறைந்ததாகவும், இறுதியாக வரவு - செலவுத் திட்டத்தின் போது அது 123 ஆகக் குறைந்ததாகவும், உள்ளூராட்சித் தேர்தல் முடிவின் பின்னர் நிலைமை முற்றாக மாறி விடும் எனவும் தெரிவித்துள்ளார்.
வாக்கு பலம் குறைந்த கட்சிகளே தேர்தலை எதிர் கொள்ள தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment