விரைவில் இலங்கைக்கு 'நல்ல செய்தி': சீனா வாக்குறுதி - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 January 2023

demo-image

விரைவில் இலங்கைக்கு 'நல்ல செய்தி': சீனா வாக்குறுதி

 

UaxoCAd


விரைவில் இலங்கைக்கு நல்ல செய்தி தரப் போவதாக பிரதமர் தினேஷிடம் வாக்குறுதியளித்துள்ளனர் தற்போது இலங்கை வந்துள்ள சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள்.


நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு சீனா தோள் கொடுக்கும் என சீன பிரதிநிதிகள் குழுவை தலைமை தாங்கி வந்த அந்நாட்டின் அமைச்சர் சென் சா நம்பிக்கை கொடுத்துள்ளதாகவும் பிரதமர் தரப்பு விளக்கமளித்துள்ளது.


சீன கடன் வலைக்குள் சிக்கியமையே இலங்கையின் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment