தேர்தலை நடாத்தக் கோரி முஜிபுர் ரஹ்மான் வழக்கு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 January 2023

தேர்தலை நடாத்தக் கோரி முஜிபுர் ரஹ்மான் வழக்கு

 நிதிப் பற்றாக்குறையை காரணங்காட்டி தேர்தலை பின் போடும் எண்ணம் அரசுக்கிருப்பதாக சந்தேகம் நிலவி வரும் நிலையில், தேர்தலை நடாத்த உத்தரவிடுமாறு கோரி அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்துள்ளார் முஜிபுர் ரஹ்மான்.


கொழும்பு மேயர் பதவியை இலக்கு வைத்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ள முஜிபுர் ரஹ்மான், தேர்தல் ஆணைக்குழுவுக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும் என்பதால் அனைத்து கட்சிகளும் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற மும்முரமாக இயங்குவதுடன் பிரபலமான நபர்களை வேட்பாளர்களாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment