கொழும்பு மேயர் பதவியை இலக்காக வைத்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துள்ள முஜிபுர் ரஹ்மானை எதிர் கொள்ள, ஐக்கிய தேசியக் கட்சி - பெரமுன கூட்டணி, மீண்டும் ரோசி சேனாநாயக்கவை களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கிறது.
இப்பின்னணியில் ஏலவே தாம் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளமையை உறுதி செய்துள்ளார் ரோசி.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரோசி சேனாநாயக்க, பொதுத் தேர்தலில், கட்சி மட்டத்திலிருந்து தேர்வாவதற்கான போதிய வாக்குகளைப் பெறாத நிலையில் மாநகர முதல்வரானார். ராஜபக்சக்களின் வீழ்ச்சிக்கு பிந்திய 'எதிர்காலத்தை' நிர்ணயிக்கும் எதிர்வரும் தேர்தலில் அனைத்து முன்னணி கட்சிகளும் பிரபலமான நபர்களையே மேயர் பதவிக்காக களமிறக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment