தேர்தல் கடமை; பொலிசாரிடம் நிதி இல்லை - sonakar.com

Post Top Ad

Saturday, 14 January 2023

தேர்தல் கடமை; பொலிசாரிடம் நிதி இல்லை
உள்ளூராட்சி தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தேர்தல் கால கடமையில் பொலிசாரை ஈடுபடுத்துவதற்குப் போதிய நிதியில்லையென பொலிஸ் மா அதிபர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.


ஏலவே தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நிதியை கட்டம் கட்டமாகவே வழங்க முடியும் என திறைசேரியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பிலும் புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.


இதேவேளை, தேர்தலை தவிர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment