இலங்கை பொருளாதார சிக்கலின் பின்னணியில் அல்லலுறும் மக்களுக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக கனடா 3 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.
அவசரகால உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக இந்நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் கொழும்பு கனேடிய தூதரகம் விளக்கமளித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு கனடா எப்போதும் துணையிருக்கும் எனவும் தூதரகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment