போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகத்தின் பின்னணியில் பாடசாலை மாணவர்கள் கைதாகும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க.
2015ம் ஆண்டு 200 மாணவர்கள் இவ்வாறு கைதாகி சிறைப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை 2021ம் ஆண்டு அதன் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முற்காலங்களில் 30 - 40 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் கைதாகியிருந்த போதிலும் தற்காலத்தில் 16 - 17 வயதினர் அதிகம் கைதாவதாக மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment