அரிசியையடுத்து பாடசாலை சீருடை: சீனா - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 December 2022

அரிசியையடுத்து பாடசாலை சீருடை: சீனா

 இலங்கைக்கு சீனா வழங்கும் நன்கொடை அரிசியின் இறுதி 10,000 மெற்றிக் தொன் விரைவில் வந்தடையவுள்ள நிலையில் பாடசாலை சீருடைகளையும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாக தெரிவிக்கிறது கொழும்பு சீன தூதரகம்.


பாரிய கடன் வலைக்குள் சிக்கியிருக்கும் இலங்கைக்கு உலகில் வேறு எங்கும் கடன் பெற முடியாத சூழ்நிலை நிலவுகின்ற பின்னணியில் தொடர்ந்தும் 'நன்கொடைகளை' வழங்கி பழைய கடன்களையும் புதுப்பித்து வருகிறது சீனா.


இச்சூழ்நிலையில், 5 பில்லியன் ரூபா பெறுமதியான முதற்கட்ட சீருடைத் தொகுதி அனுப்பப்படுவதாகவும் இதனூடாக 70 வீத தேவை பூர்த்தியாகும் எனவும் சீன தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும், பொதுவாக உள்ளூர் அரசியல்வாதிகள் இதனைப் 'பெற்றுக் கொடுத்த' பாராட்டை வழக்கமாக தமதாக்கிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment