மரணத்தின் போதும் கோட்டாவை மன்னிக்க மாட்டேன்: பசில் - sonakar.com

Post Top Ad

Thursday 1 December 2022

மரணத்தின் போதும் கோட்டாவை மன்னிக்க மாட்டேன்: பசில்
ஜனாதிபதியாக அதிகாரத்தில் வீற்றிருந்த காலத்தில் தனது அமைச்சுப் பதவியைப் பறித்த கோட்டா மீது பசில் கடுங் கோபத்தில் இருந்ததாகவும் அவரை மரண தருவாயிலும் மன்னிக்க மாட்டேன் என தெரிவித்ததாகவும் விபரித்துள்ளார் உதய கம்மன்பில.


கம்மன்பில - விமல் கூட்டணியினர் ராஜபக்சக்களை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்த போதிலும், கோட்டாபயவின் வியத்மக குழுவினர் வேறு நபர்களை சூழ விடாமல் அவரைப் 'பிடிக்குள்' வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.


தனக்குத் தேவையான சர்வாதிகார பலத்தையும் பெற்றுக் கொண்ட போதிலும் கோட்டாபய ராஜபக்சவினால் தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போயிருந்தமையும் மக்கள் போராட்டங்களால் ராஜபக்சக்கள் மீண்டும் பதவி நீங்கியிருந்த அதேவேளை முன்னாள் சகாக்களின் ஆதரவிழந்தமை அதில் பங்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment