தினசரி 8 மணி நேர மின் வெட்டு அபாயம்: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Tuesday 6 December 2022

தினசரி 8 மணி நேர மின் வெட்டு அபாயம்: அமைச்சர்

 உத்தேச மின் கட்டண அதிகரிப்பினை அமுலுக்கு கொண்டு வராவிட்டால் ஜனவரி முதல் தினசரி எட்டு மணி நேர மின் வெட்டை அமுல் படுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர.


மின் அலகொன்றின் உற்பத்தி விலை தற்போது ரூ 56.90 ஆகியுள்ளதாகவும் இப்பின்னணியில் இலங்கை மின்சார சபை 420 பில்லியன் ரூபா தேவையைக் கொண்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.


இந்நிலையில், மின் கட்டண உயர்வு அன்றாட வாழ்வியலை வெகுவாக பாதிக்கும் என நாடாளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment