இலங்கையின் ஜனாதிபதியாவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டு, மக்கள் புரட்சியின் காரணமாக பதவி விலகித் தப்பியோடி, நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்ச 'உயர்' பதவியொன்றை எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி பதவியைப் பெற்றால் அமெரிக்கா செல்வதற்கு இலகுவாக இருக்கும் என தற்போது அந்த வழியில் முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக் கடவுச்சீட்டில் பயணிக்கக் கூடிய ஓரிரு நாடுகளுக்கு பயணித்த போதிலும், கோட்டாபய மீண்டும் நாடு திரும்ப வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவானதன் பின்னணியில் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment