தனுஷ்கவின் பிரச்சினையில் 'தொடர்பு' இல்லை: நாமல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 November 2022

தனுஷ்கவின் பிரச்சினையில் 'தொடர்பு' இல்லை: நாமல்

 



இலங்கை கிரிக்கட் அணியின் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் சட்டச் சிக்கலுக்குள்ளாகியுள்ள நிலையில் தமக்கும் அதற்கும் தொடர்பில்லையென மறுப்பு வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.


அவுஸ்திரேலியாவிலிருந்து தனுஷ்கவை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு 'முக்கிய' அரசியல் புள்ளிகள் முயற்சிப்பதாக தகவல் பரவியதன் பின்னணியில் நாமல் இம்மறுப்பை வெளியிட்டுள்ளார்.


இவ்விடயத்தில் தம்மை தொடர்பு படுத்துவது நாட்டின் நற்பெயருக்கும் விளையாட்டுக்கும் களங்கம் விளைவிப்பதாகும் எனவும் நாமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment