பொருளாதார சீரழிவுக்கு 'ஊழலே' காரணம்: IMF - sonakar.com

Post Top Ad

Monday 10 October 2022

பொருளாதார சீரழிவுக்கு 'ஊழலே' காரணம்: IMF

 இலங்கையின் பொருளாதாரம் நலிவடைந்து, சீரழிவைத்க் கண்டதற்கான பிரதான காரணம் ஊழல் என விளக்கமளித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.


ஊழல் மலிந்து காணப்பட்டுள்ளதுடன் தவறான பொருளாதார கொள்கைகளும் முகாமைத்துவமும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீரழித்துள்ளதாக அவ்வமைப்பின் இயக்குனர் கிறிஸ்டலினா விளக்கமளித்துள்ளார்.


இப்பின்னணியிலேயே இலங்கைக்கான உதவிகளை ஐ.நா ஊடாக தற்சமயம் மேற்கொண்டு வருவதாகவும் நாட்டின் நிர்வாகம் இது குறித்து துரிதமாக கவனமெடுத்து செயற்பட வெண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment