எரிபொருள்; கோடிக் கணக்கில் ஊழல்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Thursday 6 October 2022

எரிபொருள்; கோடிக் கணக்கில் ஊழல்: தயாசிறி

 இலங்கையின் பொருளாதாரம் மோசமாக நலிவடைந்துள்ள சூழ்நிலையிலும் எரிபொருள் இறக்குமதியூடாக பல கோடி ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் தயாசிறி ஜயசேகர.


விலையுயர்ந்த 'ப்ரென்ட்' நிறுவனத்திடமிருந்து மசகு எண்ணை பெறுவதாக கணக்குக் காட்டி, விலை குறைந்த இடத்திலிருந்தே எண்ணை பெறப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் அவர், சர்வதேச சந்தையில் பெரலுக்கு ஆறு டொலரே அதி கூடிய தொகையாக வர்த்தகர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்ற போதிலும் இலங்கையிலிருந்து 24 டொலர் 'தரகு' தொகை கொடுக்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


இப்பின்னணியில் ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 74 ரூபா மேலதிகமாக இணைக்கப்படுவதாகவும் அது குறைக்கப்படக் கூடிய தொகையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். ஆகக்குறைந்தது 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஊழல் இடம்பெற்றிருப்பதாக அவர் தரவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment