கோப் குழுவில் மீண்டும் சரித: சஜித் தலையீடு - sonakar.com

Post Top Ad

Tuesday 4 October 2022

கோப் குழுவில் மீண்டும் சரித: சஜித் தலையீடு


 


முன்னாள் கோப் குழு தலைவர் சரித ஹேரத் மீண்டும் கோப் குழுவில் இணைக்கப்படாதமை குறித்து அவர் விசனம் வெளியிட்டிருந்த நிலையில், ஹர்ஷவின் இடத்தை அவருக்கு வழங்குவதற்கு ஆவன செய்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


நேற்றைய தினமே சபாநாயகரால் 27 பேர் கொண்ட கோப் குழு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அதில் முன்னாள் தலைவர் சரித இணைக்கப்படாததை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது. 


இந்நிலையில், சமகி ஜன பல வேகயவின் ஹர்ஷ, தானாக விலகிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த இடத்துக்கு எதிர்க்கட்சி சரித ஹேரத்தை முன் மொழிவதாகவும் சஜித் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment