புத்தக பைகளை பரிசோதிக்க நடவடிக்கை: சுசில் - sonakar.com

Post Top Ad

Thursday 8 September 2022

புத்தக பைகளை பரிசோதிக்க நடவடிக்கை: சுசில்

 



பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.


மாணவர்களைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் இதனைத் தடுக்கு முகமாகவே இந்நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுசில் விளக்கமளித்துள்ளார்.


கிராமப்புறங்களிலும் மாணவ சமூகம் வெகுவாக போதைப்பொருள் பழக்கத்திற்குள்ளாகியுள்ள சூழ்நிலையில் அரசு இந்நடவடிக்கையை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment