மேலை நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதார தடைகள் யுக்ரைன் மீதான போரை பாதித்து வருவதாக தெரிவிக்கிறது அமெரிக்கா.
இப்பின்னணியில், வடகொரியா மற்றும் ஈரானிடமிருந்து ரஷ்யா ஆயுதங்களைப் பெற்று வருவதாக தெரிவிக்கிறது அமெரிக்கா.
ஈரானிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படக்கூடிய ட்ரோன் விமானங்கள் பெறப்படுவதாகவும் வடகொரியாவிடமிருந்து மோட்டார் ஷெல்கள் இவ்வாரம் பெறப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவிக்கிறது. ரஷ்யா - வடகொரியா - ஈரான் மற்றும் சீனா கூட்டணி தொடர்பில் மேலை நாடுகள் கூடுதல் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment