எலிசபத் ராணியின் இறுதிச் சடங்குக்கு செல்லும் ரணில் - sonakar.com

Post Top Ad

Sunday, 11 September 2022

எலிசபத் ராணியின் இறுதிச் சடங்குக்கு செல்லும் ரணில்

 

கடந்த வியாழன் மரணித்த பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள லண்டன் செல்லவுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.


பொதுநலவாய நாடுகளுக்கு ஏலவே அறிவிக்கப்பட்டுள்ளதற்கிணங்க 19ம் திகதி திங்கட்கிழமை இறுதிச் சடங்குகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அன்றைய தினம் ஐக்கிய இராச்சியத்தில் பொது மற்றும் வங்கி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இலங்கையிலும் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment