கட்சிக்குள் எந்தப் பிளவுமில்லை: SJB - sonakar.com

Post Top Ad

Monday 1 August 2022

கட்சிக்குள் எந்தப் பிளவுமில்லை: SJB

 ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதையடுத்து, சமகி ஜன பல வேகயவிலிருந்து சில உறுப்பினர்கள் ரணில் பக்கம் தாவி, பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பரவி வரும் தகவலை மறுத்துள்ளது அக்கட்சி.


கட்சியின் எதிர்காலம் தொடர்பிலான தீர்க்கமான முடிவை தலைவர் சஜித் பிரேமதாச மேற்கொள்வதற்கான முழு அதிகாரம் அவரிடம் கையளிககப்பட்டுள்ளதாகவும், யாரும் அவரைக் கை விட்டுச் செல்லப் போவதில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஹரின் மற்றும் மனுஷ ரணில் பக்கம் தாவி அமைச்சுப் பதவிகளை பெற்றிருந்த அதேவேளை, ரணில் சர்வகட்சி அரசு பற்றி பேசி வருகின்றமையும், ரணிலையும் பதவி விலகுமாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment