செப்டம்பர் முதலாம் திகதி முதல் தற்போது 12 வீதம் அறவிடப்படும் VAT, 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 டிசம்பரில் கோட்டா நிர்வாகம் பாரிய வரிக்குறைப்புகளை அறிவித்த போதிலும் பொருளாதார நிலைப்படுத்தலை தவற விட்டிருந்தது. இந்நிலையில், மேலும் வீழ்ச்சியை சந்தித்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் இக்கட்டான சூழ்நிலையை எதிர் கொண்டு வருவதுடன் தற்சமயம் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவதற்கு தீவிரமாக முயன்று வருகிறது.
நாட்டின் வரி மற்றும் பொருளாதார கொள்கைகளை சீர்படுத்துமாறு உலக வங்கி மற்றும் சர்வதச நாணய நிதியம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment