இரட்டை 'பாத்திரத்துக்கு' தயாராகும் முஸ்லிம் கட்சிகள் - sonakar.com

Post Top Ad

Sunday, 17 July 2022

இரட்டை 'பாத்திரத்துக்கு' தயாராகும் முஸ்லிம் கட்சிகள்

 கோட்டாபய அரசினை ஆதரிப்பதற்கு இரட்டை நிலைப்பாட்டை உருவாக்கியிருந்த ஹக்கீம் - ரிசாத் கட்சிகள் 20ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்வின் போதும் நாடகத்தைத் தொடர்வதற்கு முயற்சிப்பதாக அறியமுடிகிறது.


தலைவர்கள் ஒரு பக்கம், தொண்டர்கள் ஒரு பக்கம், கட்சி விதி, ஒழுக்காற்று நடவடிக்கை, விசாரணை, மன்னிப்பு என ரவுப் ஹக்கீம் அறிமுகப்படுத்திய அதிகார இழுபறி நடைமுறையை ரிசாத் பதியுதீனும் பின்பற்றியிருந்தார். எனினும், இதனால் பயனடைந்த பசில் ராஜபக்ச, முஷரப், ஹாபிஸ் நசீர், இஷாக், அலி சப்ரி ரஹீம் போன்ற சுயநலவாதிகளை பயன்படுத்திக் கொள்ளவும் செய்தார்.


எனினும், தேசிய பிரச்சினையினால் தமது பிரதிநிதிகளின் கையேறு நிலையை மக்கள் மறந்துள்ளதாக கருதும் குறித்த கட்சிக்காரர்கள், ரணில் ஆதரவு - எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்ற முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment