கோட்டா எங்கே? குழப்பும் யாப்பா! - sonakar.com

Post Top Ad

Monday 11 July 2022

கோட்டா எங்கே? குழப்பும் யாப்பா!

 கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக பிபிசி செய்திச் சேவையுடனான நேர்காணலில் தெரிவித்திருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தான் தவறுதலாக அவ்வாறு சொல்லி விட்டதாக மறுப்பு வெளியிட்டுள்ளார்.


இது குறித்து வினவிய இந்திய ஊடகம் ஒன்றுக்கே இவ்வாறு முரண்பட்ட விளக்கமளித்துள்ள அவர், எதிர்வரும் புதன் கிழமை 13ம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பவுள்ளதாகவும், வந்து இராஜினாமா செய்யவுள்ளதாகவும் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இராஜினாமாவையடுத்து 18ம் திகதி முன்மொழிவுகள் ஏற்கப்பட்டு, 20ம் திகதியளவில் நாடாளுமன்றினால் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்க்கட்சி சார்பில் விளக்கமளிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment