ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியிலிருந்து தான் விலகிக் கொண்டது தான் நேசிக்கும் நாட்டுக்கு நல்லது செய்வதற்காகவே என்கிறார் சமகி ஜன பல வேகய தலைவர் சஜித் பிரேமதாச.
சஜித் - ஜி.எல் பீரிஸ் இணைந்து டலஸ் அழகப்பெருமவை முற்படுத்தியுள்ள நிலையில், பெரமுன வாக்குகள் சிதைவது திண்ணமாகியுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளப் போவதில்லையென (இதுவரை) தெரிவித்துள்ள நிலையில், ரணிலுக்கான பெரமுன ஆதரவு வெகுவாகக் குறையும் என சஜித் தரப்பு கணிப்பிடுகிறது.
ஏலவே பெரமுனவின் ரணிலுக்கான ஆதரவுக்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், டலஸ் ஜனாதிபதியானால், சஜித் பிரதமராவதற்கும் கூட்டணி அரசைமைவதற்கும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment