இப்போது 'பொறுப்பேற்கத்' தயார்: சஜித் - sonakar.com

Post Top Ad

Monday 11 July 2022

இப்போது 'பொறுப்பேற்கத்' தயார்: சஜித்

 



கோட்டாபய ராஜபக்ச மற்றும் பெரமுனவுக்கு வழங்கப்பட்டிருந்த மக்கள் ஆணை முடிவுக்கு வந்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமது தரப்பிலிருந்து ஜனாதிபதி - பிரதமர் உட்பட்ட அமைச்சரவையை நியமித்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கத் தயார் என தெரிவிக்கிறார்.


நாட்டை ஸ்தீரப்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது தரப்பு தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர், நாடாளுமன்றுக்குள் இருந்து கொண்டு இதனைக் குழப்ப நினைப்பவர்களை தேசத் துரோகிகளாக கருதப் போவதாகவும் தெரிவிக்கிறார்.


கோட்டா ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் பிரதமர் பதவியையோ - அமைச்சரவையையோ பொறுப்பேற்கத் தாம் தயாரில்லையென சஜித் நிராகரித்திருந்தமையும், இதனைக் காரணங்காட்டி ஹரின் மற்றும் மனுஷ ரணிலுடன் கை கோர்த்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment