ஜனாதிபதி மாளிகையருகே சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருனிகா உட்பட எண்மரைக் கைது செய்துள்ளதாக பொலிசாரை ஆதாரங்காட்டி தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரியாமல் தாம் அலைவதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
எந்த பொலிஸ் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரிகள் யாரும் தெரிவிக்க மறுப்பதாகவும் உரிமை மறுக்கப்படுவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment