கோட்டா எஸ்கேப்; ரணிலிடம் அதிகாரம் கை மாறும் நிலை - sonakar.com

Post Top Ad

Wednesday 13 July 2022

கோட்டா எஸ்கேப்; ரணிலிடம் அதிகாரம் கை மாறும் நிலைதனது அதிகாரம் கை விட்டுப் போ முன்பதாக கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடியுள்ள நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


நாட்டுக்கு செய்யும் ஒரேயொரு நற்காரியமாக, இராஜினாமாவுக்கு முன்பதாக ரணிலை பதவி நீக்கம் செய்யுமாறு கோட்டாவிடம் அநுர குமார வேண்டுகோள் விடுத்திருந்தார்.


எனினும், விமான நிலைய அதிகாரிகள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையில் கோட்டா தனது மனைவி மற்றும் மெய்ப்பாதுகவலர் ஒருவருடன் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும், ரணிலும் இராஜினாமா செய்யத் தயார் என அறிவித்துள்ள போதிலும், சர்வ கட்சி அரசைமைப்பது கடினமாகியுள்ள நிலையில் ரணில் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment